வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(18.11.2022) மாலை யாழ்.நல்லூரில் ஆரம்பமானது.

இந்நிலையில் மேற்படி கண்காட்சியின் முதலாம் நாளன்று கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, மேற்படி மலர்க் கண்காட்சி எதிர்வரும்-27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாகப் பத்துத் தினங்களுக்கு காலை-8.30 மணியிலிருந்து இரவு-7 மணி வரை இடம்பெற உள்ள நிலையில் குறித்த தினங்களில் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
அத்துடன் ஆலய நிர்வாக சபையினரும் தம்முடன் தொடர்பு கொண்டு தேவையான மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)