அவல், ஆரஞ்சுப்பழம் இரண்டையும் வைத்து ஐஸ்கிரீம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் அவலை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும், நீரில் கழுவி, இரண்டு நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசறி வைக்கவும். பால் எடுத்து அதை சுண்டக்காய்ச்சி ஆற வைத்து சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும். ஜி.எம்.எஸ்.ஐ கால் கோப்பை வெதுவெதுப்பான பாலில் நன்றாகக் கரையவிட வேண்டும். பின் ஜெலடீனை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கரைய விட வேண்டும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைஸரைக் கலந்து வைக்கவும். தயார் செய்திருக்கும் சர்க்கரை கலந்த பால் அல்லது மில்க் மெய்ட்டில் ஜி.எம்.எஸ். ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர், ஜெலடின், கிரீம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, டூட்டி ஃப்ரூட்டி மற்றும் அவல் இவற்றை நன்கு கலந்து, ஐஸ்கிரீம் கப்புகளில் விட்டு, ஃப்ரீஸரில் வைக்கவும் தேவைப்படும்போது பரிமாறலாம். அரைமணிநேரம் கழித்துப்பார்த்தால் அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ்கிரீம் ரெடி.
Ingredients
Instructions