தற்போதைய யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தரப்பினரால் இன்று செவ்வாய்க்கிழமை(24.01.2023) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘புதிய யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டின் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது’ எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)