fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

வெந்தய பேஸ்பேக் மூலம் முக கருமைக்கு தீர்வு

கோடைக்காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும், இதனால் பெண்கள் வெளிய செல்ல பயப்படுவார்கள். இருந்தாலும் சில பெண்கள் வெளிய சென்று வருவார்கள் வந்ததும் முகம் கருப்பாகிருப்பதை பார்த்து வருந்துவார்கள். இந்நிலையை மாற்ற  வீட்டிலே வெந்தயத்தைக் கொண்டு தீர்வை பெறலாம்.

     தலைமுடி பிரச்சனைகள் மட்டுமின்றி முகத்தில் உள்ள  பிரச்சனைகளுக்கும் வெந்தயத்தை கொண்டு தீர்வைக் காணலாம். வெந்தயம் வீட்டிலே கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதனை கொண்டு முகத்தை பராமரிக்கலாம்.

வெந்தய பேஸ்பேக்  மூலம் முக கருமைக்கு தீர்வு

     வெந்தயத்தில் பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் நல்ல மசாஜ் செய்து பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்கும்.

     தயிருடன் வெந்தய பொடி சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி கொஞ்ச நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் கூடும். வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம். வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால் உடல்  சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்கும். 

Related posts

ஒரே மாதத்தில் முடி கொட்டுவதை ஸ்டாப் பண்ணும் ஹேர்பேக்!!

N N

முகத்தின் அழகினை மெருகூட்டச் செய்யும் சூப்பரான ஃபேஸ்பேக்!!

TT Media

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முகத்தினை வெள்ளையாக்கலாம்!!

N N