fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கிளிநொச்சியில் யானை தாக்கி படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் மரணம்!

காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(31) மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த- 19 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி (Gayathri Dilrukshi) என்ற 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேதினக் கூட்டம்

TamilTwin

டெல்லியில் கொரோனா பாதித்த பலருக்கு அறிகுறியே இல்லை!- அரவிந்த் கேஜ்ரிவால்

World News

அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

World News