fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் இணைகிறார்

                இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறி இருப்பவர் விஜய் ஆண்டனி.  இவர் நடித்த படங்கள் அனைத்துமே மாறுபட்ட கதை அம்சம் கொண்டவை.  இப்பொழுது இவர் கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களில் நடித்து இருக்கிறார்.  இப்படங்களை தொடர்ந்து அவர் தமிழரசன் மற்றும் காக்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.  இப்படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.  தற்போது இப்படத்தில் மலையாள பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார்.  இவர் கடைசியாக விக்ரம் நடித்த ஐ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழரசன் படத்தில் சோனு சூட் வில்லனாக நடிக்கிறார்.  மேலும் இப்படத்தில் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். 

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் இணைகிறார்

      சமூக வலைதளங்களில் சுரேஷ் கோபி விஜய் ஆண்டனி உடன் டாக்டர் கெட் அப்பில் இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன.  தமிழரசன் படத்திற்கு இசை ஞானி இளையராஜ் இசை அமைக்கின்றார்.  மேலும் இப்படத்தினை  எஸ். என். எஸ். மூவிஸ் சார்பில்  கௌசல்யா ராணி இப்படத்தினை தயாரிக்கிறார்.

Related posts

பாலாவுடன் இணைந்த ஆர்.கே.சுரேஷ்

N N

பார்வையற்ற இளைஞருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்த டி.இமான்

N N

ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் 25 ஆயிரம்..! 50 மாற்றுத்திறனாளிகளின் மனதை குளிரவைத்து ராகவா லாரன்ஸ்.!

TamilTwin India