fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கண் அழகிற்கான மேக்கப்

அதிகமான பெண்கள் கண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கான மேக்கப் செய்வது பற்றிய தெளிவு பெரும்பாலும் இல்லை, சரி கண்களை அழகுப்படுத்த எவ்வாறு மேக்கப் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம். பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும்.

கண் அழகிற்கான மேக்கப்

அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும். பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ ஷேடோவை பயன்படுத்துவது நல்லது.  முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Related posts

10 நிமிடத்தில் சிம்பிளான ஃபேஸ்பேக் செய்யலாம் வாங்க!!

N N

கண் புருவம் அழகாக

N N

சரும ஆரோக்கியத்திற்கு சிம்பிளான பேஸ்பேக்!!

N N