fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

பண்டிகை நாட்களில் கொரோனாத் தொற்று பரவாமல் இருக்க கூடுதல் கவனம் அவசியம்.. சுகாதாரத்துறை செயலாளர்

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உரையாற்றும்போது பண்டிகை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பண்டிகை நாட்களில் கொரோனாத் தொற்று பரவாமல் இருக்க கூடுதல் கவனம் அவசியம்.. சுகாதாரத்துறை செயலாளர்

அதாவது கூறுகையில், “தமிழகத்தில் கொரோனாத் தொற்று பல கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது, உண்மையில் இத்தகைய நாட்களை எதிர்பார்த்துதான் அனைவரும் காத்திருந்தோம்.

கொரோனாப் பாதிப்பு குறையும் நிலையில் மக்கள் அலட்சியமாக இருத்தல் கூடாது என்பது எங்களின் அன்புக் கட்டளையாகும். மேலும் இப்போது நாம் தீபாவளியைப் பண்டிகையினை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம்.

பல மாதங்களுக்குப் பின்னர் மக்கள் நெரிசலாகப் பொருட்களை வாங்குதல், விழாவினைக் கொண்டாடுதல் என எந்தவொரு விஷயத்திலும் அஜாக்கிரதையாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். இந்தியாவில் கொரோனா பரவியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்”  என்று கூறியுள்ளார்.

Related posts

சபரிமலையில் பலத்த பாதுகாப்பு! இளம் பெண்கள் தரிசனம் தொடர்பில் விரைவில் தீர்ப்பு

World News

சென்னையில் தங்கம் விலை எதிர்பாராத அளவில் சரிவு!!

TT Media

இலங்கையில் இருந்து இந்தியாவை கப்பலில் வந்தடைந்த 713 இந்தியர்கள்

World News