Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்ஏழாலை தெற்கு சூராவத்தை முத்துமாரி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்(Photos)

ஏழாலை தெற்கு சூராவத்தை முத்துமாரி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்(Photos)

யாழ்.ஏழாலை தெற்கு சூராவத்தை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை(01.8.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 11 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் சிறப்பாக இடம்பெறும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 8 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-7 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-7 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 10 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வியாழக்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தீர்த்த உற்சவமும், அன்றையதினம் மாலை-5.30 மணிக்குத் திருவூஞ்சலைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

மஹோற்சவ காலங்களில் தினமும் முற்பகல்-10 மணிக்கும், மாலை-6.30 மணிக்கும் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமாகும் என மேற்படி ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மஹோற்சவ நாட்களில் தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular