fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

என்னை நோக்கி பாயும் தோட்டா ஏப்ரலில் ரிலீஸ்

      தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்து இருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.  இப்படத்தின் படப்பிடிப்பு 2016 – ம் ஆண்டிலேயே  தொடங்கப்பட்டுவிட்டது.  கடந்த வருடமே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே சென்றது.  படத்தினை படக்குழு திரைக்கு கொண்டு வர முயன்ற பொழுது மீண்டும் பல்வேறு பிரச்சனைகள் இப்படத்திற்கு ஏற்ப்பட்டது.  இதற்கு முன்னால் எடுக்கப்பட்ட படங்களுக்கு வாங்கிய கடனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே செல்வதாக தயாரிப்புக்குழு தரப்பில் கூறப்பட்டது.   சமீபத்தில் தான் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழ் அளித்தனர். 

என்னை நோக்கி பாயும் தோட்டா ஏப்ரலில் ரிலீஸ்

      இந்நிலையில் படத்தினுடைய டிரைலர் தயாராகிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.  அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் படத்தினை வருகிற ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் உடன் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

Related posts

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்

N N

நான் பயந்தது நடந்து விட்டது ‘ஹேராம்’ குறித்து கமல்ஹாசனின் டுவீட்!

TamilTwin India

கவிஞா்கள் ஜனரஞ்சகமான திரைப்படப் பாடலை எழுத முடியும், யுகபாரதி பேச்சு

TamilTwin India