fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி

ஒரு வயது தாண்டிய குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் முட்டை சாப்பிடலாம். சில குழந்தைகளுக்கு முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி வரக்கூடும் என்பதால், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முட்டையை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி

         குழந்தைகளுக்கு முதலில் மஞ்சள் கருவையும், அதன் பிறகு வெள்ளைக் கருவையும் கொடுக்க வேண்டும். பொதுவாக, குழந்தைகளுக்கு முதன்முதலாக முட்டை கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் மஞ்சள் கருவை மட்டும் கொடுத்து, அது நன்கு செரித்து குழந்தையின் உடலுக்குத் தொந்தரவு ஏதும் செய்யவில்லை என்று உறுதிப்படுத்திய பின் வெள்ளைக் கருவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இப்போது முட்டை புர்ஜி செய்முறை பற்றி பார்க்கலாம்.

முட்டை புர்ஜி - Egg burg

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 4
  • சோம்பு - சிறிதளவு
  • வெண்ணெய் - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு
  • முட்டை – 3
  • கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு

Instructions

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கிய பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். முட்டை நன்றாக வெந்து பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான முட்டை புர்ஜி ரெடி.



Related posts

வீட்டிலேயே சிம்பிளாக மைதா பட்டர் பிஸ்கட்!!

N N

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரியாணி!!

N N

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் 65

N N