fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கிழக்கில் கொரோனாத் தொற்று 50 ஆக அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 50 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மூலமாக நால்வரும், பேலியகொட கொத்தணி மூலமாக 46 பேரும் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

கிழக்கில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரிவில் அதிகூடிய தொற்றுக்களாக 26 பேர் இனங் காணப்பட்டிருந்தனர். இறுதியாக மூதூரில் மூவரும், கிரான் பிரிவில் முறக்கொட்டாஞ்சேனையில் ஒருவரும் புதிதாக இனம் காணப்பட்டிருநதனர்.

அம்பாறை மகாஓயா, தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப் பிரிவில் இனம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும், மினுவாங்கொட கொத்தணி மூலம் தொற்றுக்குள்ளானவர்கள் ஏனைய 46 பேரும் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.

கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 476 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுப் புதன்கிழமை(28) வரை 495 பேர் மேற்படி ஐந்து வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 180 பேர் அனுமதிக்கப்பட்டு 17 பேர் குணமடைந்து வெளியேறியமையால் தற்போது 161 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 92 பேரும், கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 87 பேரும், பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 65 பேரும், பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 71 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 2335 பேரில் 1200 பேருக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை, கிழக்கிலுள்ள 11 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1679 பேர் அனுமதிக்கப்பட்டு 1585 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 93 பேருக்குச் சாதகமான அதாவது தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. 143 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே, தற்போது மேற்படி 11 நிலையங்களிலும் 1443 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மறு அறிவித்தல் வரை இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்தல் இடைநிறுத்தம்!

TamilTwin

2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனம்

World News

பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது

World News