fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய குடிநீர் (Photo)

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியமை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பது தொடர்பில் மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.

குறித்த கிணறு அமைந்துள்ள பகுதியைச் சூழவுள்ள நிலப்பகுதியில் ஏதேனும் இரசாயனக் கழிவுகள் அல்லது ஏதேனும் வேறு கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலந்திருக்கலாம் எனவும், சூழவுள்ள ஒரு கிலோமீற்றர் பகுதிக்குட்பட்ட நிலத்தினுடைய மேற்பரப்பிலிருந்து கழிவுகள் ஊடு வடிந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தற்கொலைச் சிந்தனையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது கல்வியியலாளர்களின் பெரும் கடமை: செஞ்சொற்செல்வர் வலியுறுத்தல்! (Video)

TamilTwin

டில்லியில் மஹிந்த!- ராகுல்காந்தியையும் சந்தித்தார்

World News

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: ரணிலின் முடிவு இன்று வெளியாகும்?

TamilTwin