fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

நோய்களை அகற்றி உடலை சீராக்கும் சுக்கு

சுக்கு பலவகை நோய்களை குணப்படுத்தக் கூடியது. தலை நோய், வாத நோய் , வயிற்றுக்குத்து,  நீர் ஏற்றம்,  நீர்க்கோவை, ஆசன நோய்,  பல்வலி,  காதுக் குத்தல் போன்ற பல நோயை குணப்படுத்தும்.  சளிக்கு சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரம் இவை ஐந்தும் போட்டு கஷாயம் செய்து குடித்து வந்தால், கடுமையான சளி மூன்றே நாட்களில் குணமாகி விடும்.  சுக்குடன் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி  தீரும்.

நோய்களை அகற்றி உடலை சீராக்கும் சுக்கு

சுக்கு பித்தத்தை  அகற்றும். சுக்கு வாயுத்தொல்லையை குணப்படுத்தும். அஜீரணத்தைப் போக்கும். மூட்டுவலியை அடியோடு குணப்படுத்தும். சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தோல், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து பற்களுக்கு பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும். சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளை எல்லாம்  சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். சுக்குடன்  மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் எல்லாம் ஒழிந்து போய் விடும்.

Related posts

உங்கள் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!

TamilTwin

பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சான்ட்விச்

N N

வீட்டிலேயே செய்யலாம் இத்தாலிய பாஸ்தா

N N