fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் கொரோனா பரிசோதனை: பத்துப் பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை(21) 266 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பத்துப் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமிலிருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்குத் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}

Related posts

75 வயது முதியவர்களுக்கு வீடு தேடிவரும் ரேசன் பொருட்கள்

World News

யாழ். இளவாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்: குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு

TamilTwin

போதைப் பொருளுக்கு அடிமையான கைதிகள், பாடசாலை மாணவர்களுக்குப் புனர்வாழ்வு: அரசாங்கம் நடவடிக்கை

TamilTwin