fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » முல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வற்குச் சுமார் நூறு மில்லியன் ரூபாவைப் பயன்படுத்த முடியும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களையும் சந்தித்து நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களுக்கு கௌரவமான வாழ்கைத் தரத்தினை ஏற்படுத்துவதற்கு நிறைவான வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை,  வடக்கு- கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு புலம்பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில்சார் அபிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுமார் 100 மில்லியன் ரூபாவை கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொடியேற்றம் காணும் நயினைத் தாயே!

TamilTwin

ஐக்கியதேசியக் கட்சியின் புதிய தலைமையை ஏற்கத் தயார்!!

TamilTwin

நல்லூரில் நாளை நாவலர் பெருமானின் நினைவு வைபவம்

TamilTwin