டக்ளஸ் தேவானந்தாவின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழில் இரத்ததானம்(Video,Photo)

கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக் கட்சி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமையும்(10.11.2021), நேற்று வியாழக்கிழமையும்(11.11.2021) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுக்கு நேரடியாகச் சென்று இரத்ததானம் வழங்கினர்.

மேற்படி கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வலி.மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன்(ஜீவன்) யாழ்.மாவட்ட உதவி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இதேவேளை, டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டுக் கடந்த பத்து வருடங்களாக கட்சி உறுப்பினர்கள் வருடாவருடம் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்து வருவதாக ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் கட்சி உறுப்பினர்கள் பலரும் அவரது பிறந்தநாளை முன்னிட்டுப் பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)