fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு பக்கம் கூட்டணி பேசும் தேமுதிக

வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் பாமக விற்கு கொடுத்த அளவிலான தொகுதிகளைத் தங்களுக்குத் தர வேண்டும் மேலும் கேட்ட தொகுதியை மட்டுமே தரவேண்டும் என்பதால் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. பல முறை பாஜக மற்றும் அதிமுகவினருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி குறித்து தேமுதிகவிடம் பேசினார். இந்நிலையில் நேற்று முன் தினம் (மார்ச் 6) நடைபெற்ற அதிமுக – பாஜக தலைமையிலான கூட்டணி மாநாட்டு மேடையில் கூட விஜயகாந்த் படம் இருந்தது மற்றும் தேமுதிக கொடியும் இருந்தது பின்னர் திடீரென மாநாடு ஆரம்பிக்கும் முன் கொடியும் கட்சித்தலைவர் விஜயகாந்த் படமும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

ஒரே நேரத்தில் இரண்டு பக்கம் கூட்டணி பேசும் தேமுதிக

பாஜக அமைச்சர் பியூஸ் கோயலுடன் சுதிஸ் அவர்கள் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் திமுக செயலாளர் துரை முருகனிடம் கூட்டணி குறித்து சில தேமுதிக  நிர்வாகிகள் பேசினர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் சுதிஸ் அவர்கள் நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே எங்கள் நிர்வாகிகள் திமுகவிடம் பேசினர் என்றார். மேலும் திமுக பேசிய வரம்பற்ற அரசியலை நான் பேசினால் அவர்கள் நிலைமை மோசமாகிவிடும் என்றார்.

Related posts

அப்பிள் மற்றும் பிராட்கொம் நிறுவனங்களுக்கு அபராதம்!

World News

கிளிநொச்சியில் ஆராய்ச்சியின் பின்னர் புதியவகை சுவை மிகுந்த மாமர இனம் கண்டுபிடிப்பு

World News

அடுத்தவாரம் வழமை போன்று அமைச்சரவைக் கூட்டம்…

TamilTwin