fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திருநங்கைகளை தனித்தனியாக பிரித்து வைப்பது தவறு – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.  அதன் பின் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான சீதக்காதி படத்தில் இவர் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தார்.  பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.  96 படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  இப்படத்தினை பிற மொழிகளிலும் தயாரிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

திருநங்கைகளை தனித்தனியாக பிரித்து வைப்பது தவறு - விஜய் சேதுபதி

இப்பொழுது சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் திருநங்கையாக நடித்து வருகிறார்.  இப்படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, படத்தில் திருநங்கை கதாப்பாத்திரத்தினை எளிதாக செய்துவிடலாம் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் அவ்வாறு நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்.  இந்த சமூகத்தில் திருநங்கைகளை ஏன் பிரித்து வைத்து உள்ளனர்.  சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போல் இப்படி பிரித்து வைப்பது தவறு மேலும் இது பெரிய அவமானம் ஆகும் என அவர் தெரிவித்து உள்ளார்.

Related posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.வி.ஆனந்த்

TamilTwin India

சூர்யாவின் அடுத்த படத்தில் இவர் தான் வில்லனா

TamilTwin India

மாஸ்டர் ரிலீஸ் ஏப்ரல் மாதம் உறுதி, படக்குழுவிடம் இருந்து வெளிவந்த தகவல் !

TamilTwin India