Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்ஹலோன்னு சொல்லாதீங்க.. வந்தே மாதிரம்னு சொல்லுங்க.. அமைச்சர் பேச்சு!

ஹலோன்னு சொல்லாதீங்க.. வந்தே மாதிரம்னு சொல்லுங்க.. அமைச்சர் பேச்சு!

நேற்று இந்தியாவின் தேசத் தலைவரான மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவானது நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அரசு அலுவலகங்கள் உட்பட நாட்டின் பல இடங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவானது இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வந்தே மாதாரம் என்ற வார்த்தையை இனி புழக்கத்தில் கொண்டு வருவது குறித்துப் பேசியுள்ளார்.

சுதிர் பேசுகையில், “தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் ஹலோ என்று சொல்வதைத் தவிர்த்து வந்தே மாதரம் என்று பேச வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்போர் தங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை  இதுபோல் ஊக்குவிக்கவும் வேண்டும்.

ஹலோவிற்கு எந்த அர்த்தமும் இல்லை; அதே வந்தே மாதிரம் என்றால் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று அர்த்தம்.

சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி வந்தே மாதரம் என்றே கூறி வந்தார்.

இல்லையே ஜெய் பீம், ஜெய் ஸ்ரீ ராம் அல்லது பெற்றோரின் பெயரைக் கூட சொல்லுங்கள்.” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular