fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கைகளை மென்மையாக வைத்திருக்க இதை செய்ங்க போதும்!!

 உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் கைகள் மென்மையாக கடைகளில் வாங்கியே க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர். கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் க்ரீம்களால் கைகளில் வறட்சி ஏற்படுகின்றது. இதனால் கையின் உள்புறம் சற்று கடினமாக மாறிவிடும். தற்போது கைகளை மென்மையாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

கைகளை மென்மையாக வைத்திருக்க இதை செய்ங்க போதும்!!

தேவையானவை:

1.     வெண்ணெய் – 1 டீஸ்பூன்

2.     உப்பு – 1 டீஸ்பூன்

3.     பப்பாளிப்பழம் – ½ கீற்று,

4.     கஸ்தூரி மஞ்சள்- 1 டீஸ்பூன்

செய்முறை:

1.     முதலில்  3 டம்ளர் தண்ணீரை எடுத்து லேசாக சூடாக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு கலந்து அதில் 15 நிமிடங்கள் கையை ஊறவைக்கவும்.

2.     அடுத்து பப்பாளிப் பழத்தினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3.     அந்த பப்பாளிப் பேஸ்ட்டுடன் வெண்ணெய் சிறிது கலந்து கொள்ளவும்.

4.     இதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூளைக் கலந்து கைகளில் அப்ளை செய்து கொள்ளவும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இதனை கைகளில் மசாஜ் செய்வதுபோல் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலசிவிடவும். கைகள் விரைவில் மென்மையாவதனை பார்ப்பீர்கள்.

Related posts

முடியை இப்படியும் பராமரிக்கலாமா?

N N

சருமம் அழகுபெற கடலை மாவு ஃபேஸ் பேக்!!

N N

முடி உதிர்வைத் தடுக்கும் பாட்டி வைத்தியம்

N N