தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மகான உதய நிதி ஸ்டாலின் திமுக கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் அவர் பேசியது மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதியில் பிரச்சாரம் செய்துள்ளார். பிரச்சாரத்தில் அவர் பேசியது. மக்களின் வங்கிகணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறி பொது மக்களை மோடி ஏமாற்றி விட்டார். பின்பு புதிய இந்தியா உருவாகும் என்று கூறினார் மோடி ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்.
தற்போது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது என்றும் தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, ஏழை மாணவர்கள் கல்விக்கடன், விவசாயக்கடன் போன்றவை ரத்துசெய்யப்படும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி நீக்கப்படும். என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.