fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது

                பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கின்றன.  அதிகமான கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.  தி.மு.க – காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்து உள்ளது.  இக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இக்கட்சிகளும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது

      தி.மு.க – காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டணி பிரச்சாரம் என்பதால் ராகுல் காந்தி இன்று நாகர்கோவில் வந்து தன்னுடைய பிரச்சாரத்தினை தொடங்க இருக்கிறார்.  டெல்லியில் இருந்து சென்னை வர விமானத்தில் வந்து சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கு இருந்து நாகர்கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்ல உள்ளார்.  பிரச்சாரத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.  அதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.  பிரச்சாரம் நாகர்கோவிலில் 3 மணிக்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Related posts

துக்ளக் விழாவில் ரஜினி சர்ச்சைப் பேச்சு! ராஜா ஆதரவு: வீரமணி எதிர்ப்பு

World News

ஆந்திராவில் வைரலாகும் துணை பெண் முதல்-மந்திரியின் டிக் டாக் வீடியோ! (video)

World News

கேரளாவிலும் வேகமெடுக்கும் கொரோனா

World News