தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யாதர்ஷினி. இவரை டிடி என்றும் சொல்வார்கள். இவர் தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்பொழுது தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
திரைத்துறையைச் சார்த்த பிரபலங்களை நேர்காணல் செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் டிடி. இந்த படத்தில் ஆகாஷ்பூரி கதாநாயகனாகவும், சார்மி கவுர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்து முடிந்துள்ளது. டிடிக்கு கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளனர். இந்த தகவலை தனது வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை சார்மி பார்த்து கூறியது. டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது என்று பகிர்ந்துள்ளார்.