மக்களின் மனதை கவர்ந்த தல அஜித் அவரை அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரபல இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
சுசீந்திரன் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். இவர் சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை செய்து வருவார். இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு செய்திருக்கிறார்.
அப்பதிவில் கூறியது 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன் என்று பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

அஜித் ரசிகர்கள் இதற்கு சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதில் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி பதிவு செய்தது அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்று பதிவு செய்துள்ளார்கள்.
இந்நநிலையில் அஜித் சில தினங்களுக்கு முன்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இயக்குனர் சுசீந்திரன் இவ்வாறு பதிவு செய்திருப்பது, விளம்பரத்திற்காகவும், அஜித்தின் கால்ஷீட்டிற்காகவும் இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் என்று குறிப்படத்தக்கது.