fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்த் திரை இயக்குநர் மகேந்திரன். இவர் புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இவர் பல படங்களில் திரைக்கதை வசனம் எழுதிருக்கிறார். தெறி படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். தற்சமயம் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென புதன்கிழமை மோசமடைந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.

இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

இதுதொடர்பாக மகேந்திரனின் மகனும், இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குநர் மகேந்திரனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டாக்டர் பட்டத்தை கலாய்த்த கஸ்தூரி, வைரலாகும் ட்விட்டர் பதிவு !

TamilTwin India

தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம், கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

TamilTwin India

வசூலை அள்ளிக்குவித்த பாஹி 3 படம் !

TamilTwin India