fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

உண்மை சம்பவத்தை படமாக இயக்கிய இயக்குனர் தினேஷ் பாபு

இந்த படத்தில் தொழிலதிபர் சாய்குமாருக்கு மகனாக  அக்‌‌ஷய் கிருஷ்ணன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அக்ஷய் கிருஷ்ணன் மீது கல்லுரியில் உள்ளவர்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். இதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யாவை பார்த்தவுடன் கிருஷ்ணனின் மனதில் காதல் ஏற்படுகிறது.

உண்மை சம்பவத்தை படமாக இயக்கிய இயக்குனர் தினேஷ் பாபு

தந்தை சாய்குமாரும், அக்‌‌ஷய் கிருஷ்ணனும் நண்பர்கள் போல பழகி வருகிறார்கள். மகனின் எல்லா நடவடிக்கைகளுக்கு செயல்களுக்கு துணையாக இருக்கும் தந்தை சாய்குமார் அவர் மகன் காதலுக்கும் துணையாக இருக்கிறார்.

இதை அடுத்து, அக்‌‌ஷய் கிருஷ்ணனின் கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அப்பொழுது  அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மருத்துவமனையில் அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு கொடிய நோய் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஆபரே‌ஷனில் பண்ணி முடித்தவுடன் உயிர் பிழைக்க குறைந்த உள்ளதாக டாக்டர் கூறியுள்ளார். டாக்டர் சொல்லுவதை நினைத்து வருந்தும் தந்தை சாய் குமார், தன்னுடைய தெய்வம் குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார். குருவாயூரப்பனின் அருளால் அக்‌‌ஷய் கிருஷ்ணன் உயிர் பிழைத்து உள்ளாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை. அக்‌‌ஷய் கிருஷ்ணனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களையே படமாக்கி இருக்கிறார்கள். அப்பாவாக நடித்திருக்கும் சாய் குமார், தன்னுடைய அனுபவ நடிப்பால் பெரும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங்களில் நடித்த சாந்தி கிருஷ்ணா இப்படத்தின்  மூலம் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார்.

Related posts

மிரட்டும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா, புழம்பி தள்ளும் ரசிகர்கள்..!!

TamilTwin India

பொன்னியின் செல்வனில் படத்தில் இருந்து விலகிய அனுஷ்கா

N N

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்

N N