
இங்கிலாந்து அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணான டிலானி செல்வநாதன் தெரிவாகியுள்ளார்.
“Miss England- 2019” அழகிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, “Miss England” போட்டியின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக டிலானி செல்வநாதன் தெரிவித்துள்ளார்.இறுதிப்போட்டி தனக்கு மிகவும் சவாலானதாகவிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.