இலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இருவரின் செயல் தொடர்பில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் உதயராஜ் சரண்ராஜ் மற்றும் உதயராஜ் பிரவீண்ராஜ் ஆகியோரே இவ்வாறு இலண்டன் SOAS University இல் தமிழ்த்துறையினை நிறுவுவதற்கு நிதி உதவி அளித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆளுக்கு 1000 பவுன்ஸ் இவ்வாறு SOAS University இன் தமிழ்ப் படிப்பிற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர். புலம்பெயர்ந்து வளரும் நம் இளையோரிடையே இவ்வாறான நற்பண்புகள் உள்ளமை வரவேற்கத்தக்கது.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் மற்றும் தமிழை வளர்க்கும் பண்பு கொண்ட இளையோருக்கான எடுத்துக்காட்டாக விளங்கும் இவ்விருவரையும் தமிழ்சமூகம் பாராட்டுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு: