fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா படத்தில் நடிக்கும் யூடியூப் பிரபலம்

                நடிகர் விக்ரமின் மகனான துருவ் அறிமுக நாயகனாக நடித்த முதல் படம் வர்மா.  இப்படமானது தயாரிப்பு தரப்பிற்கும் இயக்குநர் பாலா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் படமானது கைவிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இப்படத்தினை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு வருகிறது.  இப்படத்தினை ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்க உள்ளனர்.  இப்ப்டத்தில் துருவ் விக்ரமின் ஜோடியாக பிரிட்டிஷ் இந்திய அழகி பனிதா சந்து நடிக்க இருக்கிறார்.  இப்படத்தினை அர்ஜூன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குநர் ஆன கிரிசய்யா இயக்க இருக்கிறார். 

துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா படத்தில் நடிக்கும் யூடியூப் பிரபலம்

      மேலும் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் படத்திலும் நடிகை தோற்றத்திலேயே நடிக்க இருக்கிறார்.  இத்திரைப்படத்தில் துருவ் விக்ரம் நண்பனாக யூடியூப் மூலம் பிரபலமான அன்புதாசன் நடிக்கிறார்.  இவர் ஏற்கனவே மீசைய முறுக்கு மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருக்கு யூடியூப்பில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.  இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள படத்தில் அன்புதாசன் நடிக்க இருக்கிறார்.

Related posts

அஜித்துக்கு நன்றி சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு

TamilTwin India

பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா

N N

சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்தில் விஷால்

N N