fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

சொந்த மண்ணில் அந்நியராக்கி விடாதீர்கள்- தோனி

தோனியின் பல்வேறு சாதனைகளுக்காக அவரை கௌரவப்படுத்தும் விதமாக ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தின் பெவில்யன் க்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இதைத் திறந்து வைக்க தோனியை ராஞ்சி கிரிக்கெட் வாரியம் அழைத்தது. இதனிடையே தோனி கூறியதாவது சொந்த மண்ணில் நடைபெறும் விழாவில் தன்னை திறந்து வைக்க அழைப்பது தன்னை அந்நியராக்கிவிடும் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. உலக அளவில் புகழடைந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தார்.

சொந்த மண்ணில் அந்நியராக்கி விடாதீர்கள்- தோனி

இந்திய கிரிக்கெட் அணியை தற்போது இருக்கும் நிலைக்கு எடுத்து வந்ததில் தோனியின் பங்கு மிகப்பெரியது. மேலும் டி 20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி உலகக்கோப்பை போன்ற ஐசிசியின் மூன்று விதமான உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் ஐபில் கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தவர்.

அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணி மற்றும் ஒரு ஆண்டைத்தவிர அனைத்து ஆண்டும் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய ஒரே அணி என்ற சாதனையையும் செய்துள்ளார்.

இவரின் இத்தகைய சாதனைகளுக்காக தான் அவரை கௌரவப்படுத்தும் விதமாக ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தின் பெவில்யனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

நவீன முறைகளை பயன்படுத்தி ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்

World News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!

World News

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ….

TamilTwin