fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தனுஷின் புதிய பட படபிடிப்பு குற்றாலத்தில் இருந்து தொடங்குகிறது

                சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், விஸ்வாசம் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தினை தயாரிக்கிறது.  தனுஷ் தற்போது நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக படக்குழுவினர் தயாரிப்பு எண் 34 எனப் பெயர் வைத்து இருக்கின்றனர்.  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் உருவாக்கப்பட உள்ளது.  இதில் தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.  தொடர்ந்து 30 நாட்கள் குற்றாலத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

தனுஷின் புதிய பட படபிடிப்பு குற்றாலத்தில் இருந்து தொடங்குகிறது

      இப்படத்தினை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்குகிறார்.  தனுஷும் இவரும் இணையும் இரண்டாவது படம் இது ஆகும்.  முதலில் இருவரும் கொடி படத்தில் இணைந்தனர்.  இப்படம் குறித்து இயக்குநர் துரை செந்தில் குமார் கூறும் பொழுது, தனுஷுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சினை வழங்குகிறது.  இப்படத்தினை மிகச் சிறந்த படமாக வழங்க வேண்டிய பொறுப்பு என் தோள்களில் உள்ளது, அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் எனக் கூறி இருக்கிறார்.  ஓம் பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  இரட்டை இசை அமைப்பாளர்களான விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசை அமைக்கின்றனர்.

Related posts

”இரண்டாம் குத்து” பட டீசரை நீக்க ஐகோர்ட் உத்தவு..!! குழப்பத்தில் படக்குழு..!!

TamilTwin India

இதய துடிப்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கணவருக்காக உருகிய ஸ்ரேயா!

TamilTwin India

கார் விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

TamilTwin India