Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்திலீபனின் நினைவுகளைத் தாங்கி வெளிவந்தது தேசியம்: நல்லூரில் இலவச விநியோகம்(Photos)

திலீபனின் நினைவுகளைத் தாங்கி வெளிவந்தது தேசியம்: நல்லூரில் இலவச விநியோகம்(Photos)

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாளை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகதீபம் திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு புகைப்படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று இன்று திங்கட்கிழமை(26.9.2022) புதிதாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகை நான்கு பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளதுடன் தியாகி திலீபனின் முழு வரலாறும், தியாகி திலீபனின் அகிம்சை வழியிலான உண்ணா நோன்பின் பன்னிரண்டு தினங்களிலும் நடந்த சம்பவங்களும் பத்திரிகையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நோக்கை மையமாகக் கொண்டு 1000 பத்திரிகைப் பிரதிகள் அச்சிடப்பட்டு நல்லூரில் இன்று இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டதுடன் ஏனைய பிரதிகளை மாணவர்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் எதிர்வரும் காலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்த்தேசியத்தின் வரலாறுகளையும், தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி ‘தேசியம்’ பத்திரிகையை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular