பரீட்சைத் திணைக்களத்திற்குப் புதிய ஆணையாளர் நியமனம்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும்- 29 ஆம் திகதி திங்கட்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை, முன்னதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளராக சனத் பூஜித்த பதவி வகித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.