fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மாசு அதிகமான நகரமாக டெல்லி தேர்வு
செய்திகள்

மாசு அதிகமான நகரமாக டெல்லி தேர்வு

மாசு அதிகமான நகரமாக டெல்லி தேர்வு

இந்தியாவின் தலைநகரமான டெல்லி நகரம் உலகிலேயே அதிக அளவு மாசு காணப்படக்கூடிய நகரமாக உள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.  இந்த முடிவு இந்தியாவுக்கு அதிக அளவில் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தி உள்ளது. 

      டெல்லியில் உள்ள குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் போன்ற நகரங்கள் அதிக அளவில் மாசு உள்ளதாக காணப்படுகிறது.  இதனாலேயே டெல்லி நகரம் அதிக அளவு மாசு உள்ள நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  உலக அளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நகரங்களின் மாசு அளவினைக் கணக்கிட்டு இந்த முடிவினை வெளியிட்டு உள்ளது.  உலக அளவிலேயே மாசு அதிகமாக காணப்படக் கூடிய நகரங்களின் பட்டியலில் முதல் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

      தென்னிந்திய நகரங்களை விட வட இந்திய நகரங்கள் தான் அதிக அளவில் மாசு பெற்றுக் காணப்படுகிறது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த வருடம் மாசு அதிக அளவில் அதிகரித்து  உள்ளது.  கடந்த நான்கு வருடங்களாக மாசு கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் உலக அளவில் உள்ள தலைநகரங்களை ஒப்பிடுகையில் டெல்லியில் மாசு அதிக அளவிலேயே காணப்படுகிறது.

Related posts

நான்கு நாட்களுக்கு அனல் காற்று வீசும்

World News

மூன்று மாதங்களின் பின் மீள ஆரம்பமாகும் பாடசாலைகள்!

TamilTwin

செருப்பிலும் கால் துடைப்பானிலும் இலங்கையின் தேசியக்கொடி!

SL News