fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

உலகிலேயே மிக மாசடைந்த நகரம் டெல்லி

உலகிலேயே மிக மாசடைந்த நகரம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள குருகிராம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் க்ரீன் பீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மட்டுமன்றி அதிக மாசடைந்த நகரங்களில் முதல் 10 நகரம் இந்தியாவில் தான் உள்ளதாகவும் ஆய்வு வெளியிட்டது.

இதில் பாகிஸ்தானின் பைசலாபாத் முதல் 10 இடத்தில் உள்ளது. மேலும் அதிக மாசடைந்த 30 நகரங்களின் பட்டியலில் 22 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில்  பாகிஸ்தானின் 2 நகரங்களும் சீனாவின் 5 நகரங்களும் மற்றும் வங்காளதேசத்தை சார்ந்த 1 நகரமும் இடம்பெற்றுள்ளது.

உலகிலேயே மிக மாசடைந்த நகரம் டெல்லி

இதனிடையே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும், மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மற்றும் மாசுபாட்டின் அளவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

நவீன தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற நிலைகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Related posts

யாழில் பெரும் சத்தத்துடன் வெடித்த மின்மாற்றி: இருளில் மூழ்கிய கிராமங்கள் (Video)

TamilTwin

மகனின் கொட்டன் தாக்குதலில் தந்தை படுகாயம்: யாழில் சம்பவம்!

TamilTwin

முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும்! நீதிபதிகள் கேள்வி

World News