வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (24.10.2022) தீபாவளி விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற உள்ளது.
அந்தவகையில் நாளை காலை-8 மணிக்கு விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெறும் என மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)