fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மது போத்தலினுள் உயிரிழந்த பாம்பு குட்டி!
இந்தியச் செய்திகள் செய்திகள்

மது போத்தலினுள் உயிரிழந்த பாம்பு குட்டி!

அரியலூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மது போத்தலினுள் உயிரிழந்த பாம்பு குட்டி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் 36 வயதுடைய சுரேஷ் விவசாயி.

இவர் புத்தாண்டை ஒட்டி, சுத்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார்.

பின்னர், பாட்டிலை திறந்து சிறிதளவு குடித்த சுரேஷ், மீண்டும் குடிப்பதற்காக டம்பளரில் மதுவை ஊற்ற முயன்றார்.

அப்போது, பாட்டிலின் உள்ளே இறந்த நிலையில் பாம்பு குட்டி ஒன்று கிடந்ததை கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து, அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மழை தொடரும்: வெளியானது புதிய அறிவிப்பு!!

World News

புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை பார்வையிட்டார் முதல்வர் (PHOTOS)

N N

வவுனியாவில் இன்று ஒருவருக்கு கொரோனா!

N N