பாலிவுட் பிக்பி அமிதாப்பின் மகள் ஸ்வேதா நந்தாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்பாவும், மகளும் சேர்ந்து சமீபத்தில் ஜீவல்லரி விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்கள். அமிதாப் மகனை விட மகள் மேல் தான் அதிகம் பிரியம் வைத்திருக்கிறார். சமீபத்தில் மகள் மும்பையில் நடைபெற்ற ஆடைக்களுக்கான ராம்ப் வாக் ஷோ ஒன்றில் தனது நண்பர் மற்றும் பாலிவுட் படத்தயாரிப்பாளருமான கரண் ஜோஹருடன் மேடையில் நடந்து வந்தார். ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஆடைகளை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட ராம்ப் வாக் அது.
இந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கவும், விடியோ எடுக்கவும் மேடையைச் சுற்றி கூட்டமாக இருந்தனர். நிகழ்ச்சியில் முதல் வரிசையில் இருந்த அமிதாப் வீடியோ எடுத்தார் அவரால் எடுக்க முடியவில்லை. உடனே அமிதாப் புகைப்படக் காரர்களை பார்த்து விசில் அடித்து விலகச் சொன்னார். அவர்கள் விலகியதும் தன் மகள் கரண் ஜோஹருடன் ராம்ப் வாக் வந்ததை வீடியோவில் பதிவாக்கினார். அமிதாப் புகைப்படக் காரர்களை பார்த்து விசில் அடித்து விலகச் சொன்னதும் மகளை ராம்ப்வாக்கில் வீடியோ எடுத்ததையும் பார்க்க கவிதை மாதிரி இருந்ததாக வட இந்திய மீடியாக்களில் எழுதி வருகின்றனர். அப்பா, மகள் பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூட ஒரு சிலர் எழுதுகிறார்கள்.