fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடிய டோனி

 பிரபல கிரிக்கெட் வீரர் டோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து இருக்கும் போது அவரின் ரசிகர் அவரை பார்க்க ஒடி வந்துள்ளார் அப்பொழுது ரசிகருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். இது சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் பரவி வருக்கிறது.

ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடிய டோனி

       ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். அப்போது  ரசிகர் தடுப்புச் சுவரைத் தாண்டி  மைதானத்திற்குள் நுழைந்து, கேப்டன் டோனியை நோக்கி ஓடி வந்துள்ளார். டோனி அவரிடம் பிடிபடாமல், ‘முடிந்தால் பிடித்துப் பார்’ என்று ஓடினார். பின்பு பாதுகாவலர் ஓடி வந்து, ரசிகரைப் பிடித்துக்கொண்டார். பின்பு ரசிகருக்கு  டோனி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

               டோனி மைதானத்தில் ரசிகருடன்  ஓடிப்பிடித்து விளையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போதும், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம் சிக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். பின்பு கட்டி பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை சிஎஸ்கே வெளியிட்டது. தற்போது இது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.              

Related posts

இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் திமுக நாடகமாடுகின்றது

World News

10 லட்சம் பேரில் 140 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறோம்… இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!

TT Media

கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவுக்கு பெரும் கிராக்கி

World News