கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்க முடியாது

நாட்டின் ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று(22) ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறு கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கிய பல மேற்கத்திய நாடுகளில் தடைகளை நீக்கிய பிறகு கொவிட் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“இலங்கையில் கொவிட் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இல்லாத போதிலும், அதன் அர்த்தம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்பது அல்ல. அதை மறுபரிசீலனை செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை சில காலம் தேவைப்படும்” என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நாட்டில் கொவிட் கொவிட் தொற்றுடன் ஒப்பிடும் போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.