தொடர்ந்து கரை ஒதுங்கும் சடலங்கள்!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி – கட்டைக்காடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்த நிலையில், கட்டைக்காடு பகுதியிலும் அதே மாதிரியாக உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கரையொதுங்கிய 6வது சடலம் இதுவாகும்.