fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

ஈரானிலும் மூன்று இலட்சத்தை நெருங்கிய பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் ஒரே நாளில் 196 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் உள்ளது.

Related posts

யாழில் கொரோனா தொற்றுப் பரிசோதனை: இருவருக்குத் தொற்று உறுதியானது!

TamilTwin

நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி….: யாழில் ஆரம்பமானது விவசாயக் கண்காட்சி (Photos)

TamilTwin

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா – பாதிப்பு 43 ஆக உயர்வு

World News