fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562 இற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், பிரேசில் இரண்டாவது இடமும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Related posts

யாழ். நகர்ப்புற கடைத்தொகுதிகளுக்கு யாழ். மாநகர் முதல்வர் திடீர் விஜயம் (Photos)

TamilTwin

சீரற்ற காலநிலையால் 4,126 பேர் பாதிப்பு!! (Photos)

TamilTwin

அசாமில் நிலநடுக்கம்

World News