fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனாவால் மெக்சிக்கோவில் மட்டும் 46000 பேர் பலி

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 58 லட்சத்து 47 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 563 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 885 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,56,747
பிரேசில் – 92,568
மெக்சிகோ – 46,688
இங்கிலாந்து – 46,119
இந்தியா – 35,747
இத்தாலி – 35,141
பிரான்ஸ் – 30,265
ஸ்பெயின் – 28,445

Related posts

யாழ். வந்தார் கோத்தபாய: பெருமளவு இராணுவம், பொலிஸார் குவிப்பு

TamilTwin

நல்லைக் கந்தன் பெருவிழா: வெளியானது யாழ்.மாநகரசபை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு! (Video)

TamilTwin

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும்!- நீதிபதி அதிரடி

World News