இம்மாதம் கொரோனா தொற்றால் வடக்கில் 230 பேர் மரணம்!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொரோனா நோயால் உயிரிழந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 935 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 720 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்டம்பர் முதல் 16 நாட்களில், 6,865 கொரோனா தொற்றாளர்கள் வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.