Friday, February 3, 2023
HomeNews and Viewsஉலகச் செய்திகள்விறுவிறுவெனப் பரவும் கொரோனா.. 31 ஆம் தேதிக்குள் நாடு திரும்பாவிட்டால் குடியுரிமை ரத்து..!

விறுவிறுவெனப் பரவும் கொரோனா.. 31 ஆம் தேதிக்குள் நாடு திரும்பாவிட்டால் குடியுரிமை ரத்து..!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆம் ஆண்டு வரை உலகை ஆட்டிப் படைத்தது. பல லட்சக் கணக்கிலான உயிர்களைக் காவு வாங்கிய கொரோனாவுக்குப் பெரிய அளவில் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தடுப்பு மருந்துகளே இருப்பதால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பலவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைப்படுத்தியது.

தற்போது மீண்டும் கொரோனா சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் என ஒவ்வொரு நாடுகளிலும் பரவி வருகின்றது.

கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாக மீண்டும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்து வருகின்றது.

அந்தவகையில் வெளிநாட்டில் இருந்து குவைத் திரும்புவோர் ஜனவரி 31 ஆம் தேதிக்குல் நாடு திரும்ப வேண்டும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நாடு திரும்பாவிட்டால் குவைத் அரசின் குடியுரிமை தானாகவே ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க குவைத் அரசு எடுத்துள்ள இந்த முடிவானது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Most Popular