fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » உலகளவில் 13.72 கோடியை தாண்டிய கொரோனா தொற்று!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

உலகளவில் 13.72 கோடியை தாண்டிய கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,72,48,180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,04,26,941 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29,58,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,63,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,792 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிபா வைரஸ், வெள்ளம், கொரோனா… என கேரளா காதலர்கள் திருமணத்துக்கு இத்தனை தடைகளா?

World News

17 பேரின் உயிரை பறித்த சுற்றுச்சுவர்! வீட்டின் உரிமையாளர் கைது

World News

3 தமிழ்ப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கீடு!

World News