fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,394 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 144 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றுக்கு உள்ளான 3,021 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 247 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டில் இதுவரையில் 598 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

World News

வலி. மேற்குப் பிரதேச செயலகத்தில் இன்று மாபெரும் குருதிக் கொடை முகாம்

TamilTwin

யாழில் 20 ஆவது நாளாகவும் தொடரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் (VIDEO, PHOTO)

N N