இலங்கையில் பதிவான கொரோனா மரணங்கள்

நேற்று மேலும் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

09 ஆண்களும் 01 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,407 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 08 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.